மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) போர்ட்டலில் இருந்த பாதுகாப்பு ஓட்டைகளைத் தனது பிளாக் பதிவு மூலம் வெளிப்படுத்திய 19 வயது இளைஞர் நிசர்கா அதிகாரி, ஐஐடி கான்பூரின் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையமான C3iHub-ல் பொறியாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
திறந்தநிலை புலனாய்வு (OSINT) மற்றும் அச்சுறுத்தல் நுண்ணறிவுப் பொறியாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐஐடி கான்பூரின் வரலாற்றில் இளம் வயதில் பணியமர்த்தப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்று அந்த நிறுவனத்தின் இயக்குநர் மணீந்திர அகர்வால் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
வெறும் பிளாக் பதிவு மூலம் ஐஐடியில் வேலை! சிபிஎஸ்இ குறைகளை சுட்டிக்காட்டிய 19 வயது இளைஞரின் சாதனை
