புதிய யுகத்தில் ஷி சாங் மனித உரிமை இலட்சியத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்ற வெள்ளையறிக்கையை சீன அரசு மார்ச் 28ஆம் நாள் வெளியிட்டது. இதில், விரிவான தரவுகளின் மூலம், ஷி சாங்கில் கடந்த சில பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட மாபெரும் மாற்றங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன.
உயிர்வாழ்வே, அனைத்து மனித உரிமைகளுக்கும் அடிப்படை ஆகும். ஷி சாங்கில் அமைதியான முறையில் விடுதலை அமைந்த்திலிருந்து தற்போதுவரை, ஷி சாங்கின் மக்கள் தொகை, சுமார் ஒரு பத்து லட்சத்திலிருந்தே 37இலட்சமாகவும், சராசரி ஆயுள் காலம் 35.5இலிருந்து 72.19 ஆண்டுகளாகவும் அதிகரித்துள்ளது.
வளர்ச்சியே, பொது மக்கள் இன்பம் அடைவதற்கான திறவுகோல். 2019ஆம் ஆண்டின் இறுதி வரை, ஷி சாங்கில் மொத்தம் 6இலட்சத்து 28ஆயிரம் பதிவு செய்யப்பட்ட ஏழைகள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். 2024ஆம் ஆண்டில், ஷி சாங்கில் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளவர்களில் நபர்வாரி நிகர வருமானம் 12.5விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்தது. அமைதியான முறையில் விடுதலை அடையும் முன் ஷி சாங்கில் படிப்பறிவின்மை 95விழுக்காட்டுக்கு மேலாகவும், கல்வியில் சேர்வதற்குரிய குழந்தைகளில் பள்ளியில் சேர்க்கப்பட்டவர்கள் 2விழுக்காட்டுக்கு குறைவாகவும் இருந்தன. தற்போது, ஷி சாங்கில் படிப்பறிவின்மை உள்ளவர்கள் அடிப்படையில் இல்லை. 15ஆண்டுகால பொது கல்வி அமைப்புமுறை அங்கு முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
தவிர, ஷி சாங்கின் பாரம்பரிய பண்பாடும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. ஷி சாங்கில் உள்ள பாதையோரத்தில், பொது இடங்கள், தட்டு வடிவ அலங்காரப் பொருட்கள், விளம்பர பலகைகள் முதலியவற்றில், தேசிய பொது மொழி, திபெத்திய மொழி ஆகிய இரண்டும் எழுதப்பட்டிருக்கின்றன. மேலும், நவீன அறிவியல் தொழில் நுட்ப வழிகளின் மூலம், சுமார் 67ஆயிரம் அரிய பழம்பெரும் திபெத்திய நூல்கள் உலகளாவிய கிளவுட் சேமிப்பு மற்றும் பகிர்வு சேவை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சேதம் அடைந்த சுமார் 13990 பண்டைகால நூல்களும் பதிவேடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
ஷி சாங்கின் மனித உரிமை எப்படி வளர்கிறது என்ற கேள்விக்கு, தரவுகளின் மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் வாழ்க்கை நிலவரமும் இதனை எடுத்துக்காட்டுகிறது. எந்த வடிவ பொய்களும் இதனை மறைக்கவும் மறுக்கவும் முடியாது.