எஸ்சிஓ டிஜிட்டல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது

Estimated read time 1 min read

சீனா-ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் டிஜிட்டல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி மன்றக் கூட்டம் ஜூன் 11ஆம் நாள் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் கரமாய் நகரில் நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு, குறைந்த உயர வான்பரப்பில் பொருளாதாரம், நுண்ணறிவு இணைய இணைப்பு உள்ளிட்ட கருப்பொருட்களில் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் விவாதம் நடத்தினர்.

சீனா-எஸ்சிஓ டிஜிட்டல் தொழில்நுட்ப கருவிப் பெட்டி 2026 என்ற அறிக்கை இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பத் திட்டங்கள், டிஜிட்டல் சார் செயலிகள் ஆகிய 3 வகைகளிலான டிஜிட்டல் பொதுநலத் தயாரிப்புகள் பற்றிய வழக்குகளை தொகுத்து வழங்கும் இந்த ஆவணம், எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கு மாதிரிகளை வழங்குகிறது.

You May Also Like

More From Author