விடுமுறை காலத்தில் சுறுசுறுப்பான சீன நுகர்வு சந்தை

Estimated read time 1 min read

ஜிங்மிங் விடுமுறை காலத்தில் சீனாவின் நுகர்வு சந்தை தேவை அதிகரித்துள்ளது. வசந்தகால நுகர்வு சந்தைக்கு இது உந்து சக்தி அளித்தது.

சீன வணிக துறை அமைச்சகத்தின் தரவுகளின் படி, ஜிங்மிங் விடுமுறை காலத்தில், முக்கிய சில்லறை மற்றும் உணவக தொழில் நிறுவனங்களின் தினசரி விற்பனை தொகை  கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.4 விழுக்காடு அதிகம். ஏப்ரல் 5ஆம் நாள் வரை, புதிய வாகனங்களின் விற்பனை தொகை 24 ஆயிரத்து 680 கோடி யுவானாகும். வணிக துறை அமைச்சகம் கண்காணித்த உணவக தொழில் நிறுவனங்களின் விற்பனை தொகை 3.9 விழுக்காடு அதிகரித்தது. விடுதி நுகர்வு தொகை 2.6 விழுக்காடு அதிகம். இதர நகரங்களில் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 15.1 விழுக்காடு அதிகரித்தது.

You May Also Like

More From Author