2026ஆம் ஆண்டு உலக மனித உரிமை மேலாண்மை உயர் மன்றக் கூட்டத்தை முன்னிட்டு, சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் சீன ரென்மின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, உலகெங்கிலும் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் பங்கேற்றவர்கள் சீனாவின் மனித உரிமை லட்சியத்தின் சாதனைகளை நேர்மறையாக மதிப்பிட்டு, மனித உரிமையை நனவாக்குவதை, தேசிய நிர்வாகம் அமைப்பு மற்றும் திறனுடன் நெருக்கமாக இணைக்கும் சீனா, காலத்தின் போக்கைப் பின்பற்றி தேசிய நிலைமைகளுக்கு ஏற்ற மனித உரிமை வளர்ச்சிப் பாதையை உருவாக்கியுள்ளது என்றும் தெரவித்தனர்.
மேலும், மக்களை மையமாக கொண்ட ஆட்சிமுறையைப் பின்பற்றும் சீன அரசின் நிர்வாக செயல்திறன், சீனாவின் மனித உரிமை வளர்ச்சி நிலையைக் கண்காணிப்பதற்கான முக்கிய சாளரமாக திகழ்கிறது. இது குறித்து உலகளாவிய பங்கேற்பாளர்கள் மிகவும் பாராட்டு தெரிவித்தனர்.
மனிதகுல பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவது பற்றிய சீனாவின் தொலைநோக்குப் பார்வைக்கு 78.2 விழுக்காட்டினர் பாராட்டு தெரிவித்தனர். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, மேலும் நியாயமான உலகளாவிய நிர்வாக அமைப்பை உருவாக்க உதவும் என்று 71.7 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
