28ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா துவக்கம்

Estimated read time 0 min read

சீன ஊடக குழுமமும் ஷாங்காய் மாநகர அரசும் கூட்டாக நடத்தும் 28ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா ஜூன் 12ஆம் நாள் ஷாங்காயில் துவங்கி 21ஆம் நாள் வரை தொடர்கிறது.

உலகளவில் 125 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் சுமார் 4100 திரைப்படங்கள் நடப்பு திரைப்பட விழாவில் கலந்து கொள்ள விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளன. இது வரலாற்றில் புதிய உயர் பதிவாகியுள்ளது. இவற்றில் 82 விழுக்காடு திரைப்படங்கள் இதுவரை சர்வதேச அளவில் திரையிடப்படவில்லை.

நடப்பு திரைப்பட விழாவில், 420க்கும் அதிகமான திரைப்படங்கள் வேறுபட்ட கருப்பொருட்களிலான 1600க்கும் மேற்பட்ட திரையிடல் நிகழ்வுகளில் திரையிடப்பட உள்ளன.

You May Also Like

More From Author