2025ஆம் ஆண்டுக்கான உலக சீன மொழி மாநாடு நவம்பர் 14ஆம் நாள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் துவங்கியது. அதன் துவக்க நிகழ்ச்சியில்,
சீனத் துணை தலைமையமைச்சர் டிங் சுயெசியாங் பங்கேற்று, தலைப்புரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், சீனா மற்றும் வெளிநாடுகளின் பல தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், சர்வதேச சீன மொழி கல்வியில் அதிக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. சீன மொழியைக் கற்றல், சர்வதேச சமூகத்தில் பரந்த அளவிலான வரவேற்பு பெற்றுள்ளது. பல்வேறு நாடுகள் சீன மொழிக் கல்வியில் ஈடுபடுவதற்கு ஆதரவு மற்றும் சேவையை சீனா எப்போதும் அளித்து வருகிறது. அதேவேளை, மொழி கலாசாரப் பரிமாற்ற மற்றும் ஒத்துழைப்பில் புதிய முன்னேற்றம் பெறுவதற்கு கூட்டு முயற்சி எடுக்கும் என்று குறிப்பிட்டார். மேலும், சீன மொழி கல்வி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்து அவர் 4 அம்ச முன்மொழிவுகளை வழங்கினார்.
இவ்வாண்டில் இந்த மாநாட்டின் துவக்க விழாவில், அரசு அதிகாரிகள், நிபுணர்கள், பல்கலைக்கழகத் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர்.
