214 கோயில்களுக்கு அறங்காவலர் நியமன அறிவிப்பு!

Estimated read time 1 min read

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கான தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கான தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் ஆகியோரின் வழிக்காட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறங்காவலர் நியமன அறிவிப்பு அறங்காவலர் நியமனம் செய்யப்படவுள்ள திருக்கோயில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்ப படிவம் ஆகியவை (www.hrce.tn.gov.in) என்ற துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அறங்காவலர் நியமனம் தொடர்பான விண்ணப்பங்களை இணையவழியில் (Online) பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது விரைவஞ்சல் (Speed Post) மூலமாகவோ சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 22.07.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author