“தீய சக்தி திமுக கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர்”.. ப்ளூ பிரிண்ட்-ஐ ஏற்கனவே மக்கள் கிழிச்சிட்டாங்க..

Estimated read time 1 min read

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து திமுக தரப்பில் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு, தவெகவின் அதிகாரப்பூர்வ ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில் மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுத்துள்ளது.

“தீய சக்தி திமுக கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர், முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ மிஸ்டர் ஸ்டாலின் பொறாமை மற்றும் புகைச்சலால் அழுது வடிந்து, கத்திக் கதறியிருக்கிறார்” என்று அந்தப் பதிவில் சாடப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய், தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாகவும், ஊழலற்ற மற்றும் தைரியமிக்க சக்தியாகவும் விளங்குவதாகவும், இதன் உண்மைத் தன்மையை 2026 தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் என்றும், தற்போதைய திமுக அரசு போல அரசியலை மறந்து, ‘இன்ஸ்டா ரீல்ஸ்’ மோகத்தில் மூழ்கி மக்களை மூச்சுத்திணற வைக்காது என்றும் தவெக ஐடி விங் சாடியுள்ளது.நிதி ஆயோக் கூட்டத்தில் எதற்கும் அடிபணியாமல் தவெக தலைவர் பேசிய உரையை நாடே பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ள அந்தப் பதிவில், திமுகவின் ‘திராவிட மாடல்’ என்பது மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் ‘திருட்டு மாடல்’ என மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த திருட்டு மாடலின் புளூ பிரிண்ட்டை தமிழக மக்கள் ஏற்கனவே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டதாகவும், தவெக தலைவரின் பேச்சு பாணியை திமுக கூடாரமே காப்பி-பேஸ்ட் செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், “டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின், எந்தவொரு விசாரணைக்கும் நேரில் ஆஜரான தவெக தலைவரைப் பற்றிப் பேச தகுதியில்லை” என்றும், பாஜகவின் மறைமுக அடிமையாக இருந்துவிட்டு தற்போது நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் தவெகவை விமர்சிப்பது வேடிக்கையானது என்றும் பதிவிடப்பட்டுள்ளது.

ஊழலற்ற, லஞ்சமற்ற நிர்வாகத்தை தில்லாக அறிவிக்கத் திராணி இல்லாத ஸ்டாலின், தன் குடும்பத்தைப் போல எல்லோரையும் நினைத்து வன்மத்தைக் கக்கி வருவதாக தவெக ஐடி விங் அந்தப் பதிவில் மிக ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளது

You May Also Like

More From Author