பின்லேடன் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருந்தார் என்று ஐநா சபையில் இஸ்ரேல் குற்றஞ்சாட்டி உள்ளது.
இரட்டை கோபுர தாக்குதல் நிகழ்ந்து 24 ஆண்டுகள் ஆனதையொட்டி, ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், கத்தார் தலைநகர் தோகாவில் ஹமாஸ் தலைவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் சட்டவிரோதமானது என்று பாகிஸ்தானுக்கான ஐ.நா. தூதர் ஆசிம் இப்திகார் அகமது கூறினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் டேனி டானன், பின்லேடன் படுகொலை செய்யப்பட்டபோது அவர் பாகிஸ்தானில்தான் இருந்தார்.
வெளிநாட்டு மண்ணில் ஒரு பயங்கரவாதியை ஏன் கொல்ல வேண்டும் என்று அப்போது யாரும் கேள்வி கேட்கவில்லை எனக் கூறினார்.
பயங்கரவாதிக்குப் பாகிஸ்தானில் ஏன் அடைக்கலம் கொடுக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினர்.