2026 உலக இளைஞர் வளர்ச்சி மன்றம்

2026 உலக இளைஞர் வளர்ச்சி மன்றத்தின் நடவடிக்கையில் ஒன்றான செயற்கை நுண்ணறிவு மற்றும் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பிலான கருத்தரங்கு 16ஆம் நாள், ஹூபெய் மாநிலத்தின் வூகான் நகரில் நடைபெற்றது.

உலகின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து வந்த நூற்றுக்கும் மேலான இளைஞர்கள் மற்றும் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவு புகத்தில் சரியான கருத்துகளை பரப்புவதற்கான வழிகாட்டல், சர்வதேச ஒத்துழைப்பு, இளைஞர்களின் தலைமை பொறுப்பு உள்ளிட்டவை குறித்து இதில் கலந்துகொண்டோர் விவாதித்தனர்.

செயற்கை நுண்ணறிவு, புதிய சுற்று அறிவியல் தொழில் நுட்ப புரட்சி மற்றும் தொழில் துறையின் சீர்திருத்தத்திற்கான முக்கிய உந்து ஆற்றலாக திகழ்ந்து, இளைஞர்கள் திறமையை வெளிகாட்டுவதற்கு முக்கிய மேடையாகவும் விளங்கும் என்று இதில் கலந்துகொண்டோர் கருத்து தெரிவித்தனர்.

You May Also Like

More From Author