உலகம்:
பிரிக்ஸ் அமைப்பில் இணைய விரும்பி நிகரகுவா இவ்வமைப்பின் தலைமைப் பதவியேற்றுள்ள நாடான ரஷியாவிடம் விண்ணப்பத்தைப் சமர்ப்பித்துள்ளது என்று அந்நாட்டின் அரசு அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்தார்.
ரஷியாவில் நடைபெற்ற சர்வதேசப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிகரகுவா அரசுத் தலைவரின் ஆலோசகர் லாவ்ரியனோ ஓர்த்தெகா முரில்லோ கூறுகையில்
இந்த இலக்கு நனவாகும் என நம்பிக்கை தெரிவித்ததோடு, நாம், நியாயமான மற்றும் அருமையான உலகத்தை உருவாக்க முயற்சி செய்வோம் என்றும் குறிப்பிட்டார்.