சீன அரசவை செய்தி தொடர்புப் பணியகம் 17ஆம் நாள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சர்வதேச ஒழுங்கு பின்னடைவு பற்றியும் ஐ.நாவின் அதிகாரம் மற்றும் பங்கு குறைவு பற்றியும் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்த போது சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ கூறுகையில், ஐ.நா. முக்கியமற்றது என்பதல்ல, அது மதிக்கப்படாமலும் பேணப்படாமலும் இருந்துள்ளது தான் காரணம் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், உலகளாவிய அறைகூவல்களை எதிர்நோக்கும்போது ஐ.நா. சாசனத்தில் விதிக்கப்பட்ட கடமைகளையும் நடைமுறைப்படுத்துவது என்பது மிகவும் அவசரமான பணி என்றும், ஐ.நாவுக்கு புத்துயிர் அளித்து அதனை வலுப்படுத்துவதற்காக, அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.
17ஆம் நாள், மேலும் நியாயமான உலக ஆட்சிமுறை கட்டமைப்பை உருவாக்குவதற்கான சீனாவின் கொள்கைகள், முன்மொழிவுகள் மற்றும் செயல்கள் எனும் வெள்ளையறிக்கை இந்த செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வாங்யீ செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
