சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியின் ஒருங்கிணப்புப் பணியை நிரந்தரமான நடைமுறையாகச் செய்வது குறித்து முக்கிய உத்தரவிட்டார். அதில் அவர் கூறுகையில், கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியை ஒருங்கிணைக்கும் பணி நடைமுறைக்கு வந்த கடந்த 30ஆண்டுகளில், வறுமை ஒழிப்பு, பிரதேசத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை முன்னெடுப்பது முதலியவற்றில் முக்கிய பங்களிப்பை ஆற்றியுள்ளது. கட்சி மற்றும் சீன சோஷலிச அமைப்பு முறையின் நன்மையை இது வெளிக்காட்டியுள்ளது.
இவ்வாண்டு 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டாகும். வழக்கமான நடைமுறையாக உதவியளிப்புப் பணியை மேற்கொள்ளும் முதலாவது ஆண்டாகும். ஒருங்கிணைப்பு அமைப்பு முறையையும் வழிமுறையையும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். ஒருங்கிணைப்புத் துறைகளை விரிவாக்கி ஒன்றுக்கொன்று நலன் அளித்து கூட்டு வெற்றி மற்றும் கூட்டு வளர்ச்சியை நனவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
