சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஜூலை 13ஆம் நாள் பெய்ஜிங்கில் ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவைச் சந்தித்துரையாடினார்.
அப்போது வாங்யீ கூறுகையில், ரஷியா மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பிற உறுப்பு நாடுகளுடன் இணைந்து, தியென்ஜின் உச்சிமாநாட்டுக்கு ஏற்பாடு செய்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைப் புதிய நிலைக்குக் கொண்டு செல்லச் சீனா விரும்புகிறது. மேலும், இவ்வாண்டு சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் வெற்றியின் 80ஆவது ஆண்டு நிறைவாகும். 2ஆவது உலகப் போர் வெற்றியின் 80ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நிகழ்ச்சியை இரு தரப்பும் இணைந்து செவ்வனே நடத்த வேண்டும். 2ஆவது உலகப் போர் பற்றிய சரியான விவரிப்பைப் பேணிகாக்க வேண்டுமெனவும் வாங்யீ தெரிவித்தார்.
ரஷிய-சீன உறவில் மேலதிக புதிய சாதனைகளைப் பெற சீனாவுடன் இணைந்து கூட்டாக முன்னேற்ற ரஷியா விரும்புவதாக லாவ்ரோவ் கூறினார்.
கொரிய தீபகற்பம், உக்ரேன் நெருக்கடி, ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை முதலிவற்றைக் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.