சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் அக்டோபர் 27ஆம் நாள் மலேசியாவின் கோலாலம்பூரில் 20ஆவது கிழக்காசிய உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார்.
அப்போது லீச்சியாங் கூறுகையில், கிழக்காசிய உச்சிமாநாடு நிறுவப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில், பிரதேசத்தின் நிதானம் மற்றும் வேகமான வளர்ச்சியை முன்னேற்றியுள்ளது. தற்போது, அமைதி மற்றும் வளர்ச்சி பல புதிய இடர்பாடு மற்றும் அறைக்கூவல்களை எதிர்நோக்கியுள்ளன. கிழக்காசிய உச்சிமாநாட்டின் இலக்கில் ஊன்றி நின்று உலக நிர்வாக முன்மொழிவைச் சுற்றி ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு பிரதேசத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மேலதிக ஆக்கப்பூர்வமான சக்திகளை வழங்கச் சீனா பல்வேறு தரப்புகளுடன் இணைந்து கூட்டாக முயற்சி செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார்.
கிழக்காசிய உச்சிமாநாட்டின் 20ஆவது ஆண்டு நிறைவுக்கான கோலாலம்பூர் அறிக்கையும் பேரிடருக்கான தடுப்பை வலுப்படுத்துவது பற்றிய தலைவர்களின் அறிக்கையும் இதில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
