சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் துறையில் இவ்வாண்டில் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையில் சமச்சீர் நிலை காணப்பட்டுள்ளது. குறிப்பாக இறக்குமதி அதிகரிப்பு வேகம் தொடர்ந்து 5 திங்களாக ஏற்றுமதி அதிகரிப்பு வேகத்தை விட அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம், ஆக்கத் தொழிலின் வளர்ச்சியுடன் இரும்பு தாதுக்கள், மின்னணு உதிரிபாகங்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களின் இறக்குமதி வேகமாக அதிகரித்துள்ளது.
மறுபுறம், சீனாவுடன் தூண்தாண்மை உறவு கொண்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா காப்புவரி விலக்கச் சலுகையை வழங்கியுள்ளது. இதனால் ஆப்பிரிக்க கோப்பிக்கொட்டை உள்ளிட்ட இறக்குமதி வணிகப் பொருட்களின் தரத்திற்கு உகந்த விலையின் ஈர்ப்பாற்றல் மேலும் அதிகரித்துள்ளது.
மென்மேலும் அதிகமான நாடுகள் சீனாவை இலக்குச் சந்தையாகக் கருதி தங்களது உயர் தரமுடைய உற்பத்திப் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்கின்றன. சீனாவில் மிகப் பெரிய நுகர்வோர் குழு, முழுமையான தொழில் சங்கிலி மற்றும் சீனாவின் உறுதியான வெளிநாட்டுத் திறப்புக் கொள்கைகள் ஆகியவை தான் இதற்கான காரணமாகும்.
