சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத்தொடர் நிறைவு

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத்தொடர் மார்ச் 10ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நிறைவு பெற்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் இந்நிறைவுக் கூட்டத்தில் பங்கெடுத்தனர்.


நிரந்தரக் கமிட்டியின் பணியறிக்கை, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடர் நடைபெற்றது முதல் இதுவரை ஆலோசனைகள் தொடர்பான பணி அறிக்கை ஆகியவை பற்றிய 2வது கூட்டத்தொடரின் தீர்மானங்கள் முதலியவை, இந்நிறைவுக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

You May Also Like

More From Author