சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 16ம் நாள் க்ரோஷிய அரசுத் தலைவராகத் தொடர்ந்து பதவி ஏற்ற சோரன் மிலனொவிச்சுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவுக்கும் க்ரோஷியாவுக்குமிடையில் ஆழ்ந்த பாரம்பரிய நட்பு நிலவி வருகிறது. இரு நாடுகள் ஒன்றுக்கொன்று மதிப்பு மற்றும் நம்பிக்கை அளிக்கும் நண்பர்களாகவும் கூட்டாளிகளாகவும் ஆகும்.
சீன-க்ரோஷிய உறவின் வளர்ச்சியில் அதிக முக்கியத்துவம் அளிக்கிறேன். சோரன் மிலனொவிச்சுடன் இணைந்து பாடுபட்டு, தத்தமது நவீனமயமாக்கத்தை நனவாக்கும் பாதையில் இரு நாடுகள் கைகோர்த்து கொண்டு நடைபோடுவதை முன்னேற்றி, இரு நாட்டின் பன்முக ஒத்துழைப்பு கூட்டாளியுறவின் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.