22ஆவது சீன-ஆசியான் பொருட்காட்சி செப்டெம்பர் 17ஆம் நாள் முதல் 21ஆம் நாள் வரை குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் நடைபெறவுள்ளது. இப்பொருட்காட்சியின் சிறப்பு ஒத்துழைப்புக் கூட்டாளியாகக் கலந்து கொள்ளும் வகையில் இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு இலங்கை உயர் நிலைத் தூதாண்மை அதிகாரிகள் தலைமையிலான அரசுப் பிரதிநிதிக் குழு ஒன்றை அனுப்பும். தவிரவும், பல துறைமுகக் கூட்டு நிறுவனங்களும் வாசனையுடைய மசாலா பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட உள்ளூரின் தனிச்சிறப்பு வாய்ந்த கூட்டு நிறுவனங்களும் இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ளவுள்ளன. அப்போது, இலங்கை அடையாளக் கண்காட்சி, இலங்கை பொருட்கள் பரவல் நிகழ்வு உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.
அடிப்படை வசதிகள், எரியாற்றல், துறைமுக வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் சீனாவும் இலங்கையும் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.