லா லிகா-சீன ஊடகக் குழுமம் ஒத்துழைப்பு

சீன ஊடகக் குழுமமும் ஸ்பெயினின் லா லிகா கால்பந்து கூட்டணியும் மாட்ரிட் நகரில் ஒத்துழைப்புக் குறிப்பாணையில் ஜூலை 29ஆம் நாள் கையொப்பமிட்டன. கால்பந்து துறைப் பரிமாற்றத்தைக் கூட்டாக முன்னேற்றுவது, போட்டிகளைக் கூட்டாக நடத்துவது, இளைஞர்களின் கால்பந்து வளர்ச்சியை முன்னெடுப்பது ஆகிய துறைகளில் இரு தரப்பும் ஒருமித்த கருத்தை எட்டின. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென்ஹாய்சியொங், லா லிகா கால்பந்து கூட்டணித் தலைவர் ஜேவியர் டெபாஸ் ஆகியோர் இரு தரப்புகளின் சார்பாக இக்குறிப்பாணையில் கையொப்பமிட்டனர்.
ஷென்ஹாய்சியொங் கூறுகையில், விளையாட்டுத் துறையின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு சீன-ஸ்பெயின் உறவின் வளர்ச்சிக்கான அரிய செல்வமாகும். லா லிகா போட்டிகளின் ஒளிபரப்புக் குறித்து சீன ஊடகக் குழுமம் லா லிகா கூட்டணியுடன் முக்கிய ஒருமித்த கருத்தை எட்டியுள்ளது என்றார்.

You May Also Like

More From Author