சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 20ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிசிங்கருடன் சந்தித்து பேசினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்
52 ஆண்டுகளுக்கு முன்பே, சீனாவும் அமெரிக்காவும், திருப்பம் ஏற்பட்ட முக்கிய தருணத்தில் இருந்தன. அப்போது அரசுத் தலைவர் மாவ் சேடொங், தலைமை அமைச்சர் சோ ஏன்லை, அரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் ஹென்றி கிசிங்கர் ஆகியோரின் தலைசிறந்த தொலைநோக்குப் பார்வையில், இரு நாடு ஒத்துழைப்பு மேற்கொள்ள முடிவு எடுத்தனர். அதைத் தொடர்ந்து, சீன-அமெரிக்க உறவின் இயல்பான நிலை தொடங்கப்பட்டது. அதனால், இரு நாடுகள் பயன் அடைந்து, உலகம் மாற்றப்பட்டது. நட்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் சீன மக்கள் பழைய நண்பர்களை மறக்காது. சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சியை முன்னெடுப்பதிலும், இரு நாட்டு மக்களிடையே நட்புறவை மேம்படுத்துவதிலும் உங்களின் வரலாற்றுத்தன்மை வாய்ந்த பங்களிப்புகளை மறக்காது என்று சுட்டிக்காட்டினார்.
தற்போது, இரு நாடுகள் மீண்டும் நாற்சந்தியில் நிற்கின்றன. இரு தரப்பும் மீண்டும் ஒருமுறை தேர்வு செய்ய வேண்டும். எதிர்காலத்தை பார்த்தால், சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு அளித்து சாதனை பெற முடியும். பரஸ்பர மரியாதை, அமைதியான சகவாழ்வு, ஒத்துழைப்புடன் வெற்றி-வெற்றி ஆகியவை இதற்கு முக்கிய திறவுகோல் ஆகும். அவற்றின் அடிப்படையில், அமெரிக்காவுடன் இணைந்து விவாதித்து, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னெடுக்க சீனா விரும்புகிறது. இது, இரு தரப்புக்கும் நலன் தருவதாகவும், உலகிற்கு பயன் அளிப்பதாகவும் இருக்கும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
தற்போதைய நிலையிலேயே, ‘ஷாங்காய் கூட்டறிக்கை’யில் உறுதிப்படுத்தப்பட்ட கோட்பாடுகளைக் கடைபிடித்து, ஒரே சீனா கொள்கை, சீனாவிற்கு மிகவும் முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், அமெரிக்க–சீன உறவு நேர்மறையான திசையில் செல்வதை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஹென்றி கிசிங்கர் தெரிவித்தார்.