இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள லட்சக்கணக்கான பயணிகளுக்கும், புதிய பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டில் பாஸ்போர்ட் மற்றும் அது சார்ந்த சேவைகளுக்கான கட்டணங்கள் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது உயர்த்தப்பட்டுள்ளன.
மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பாஸ்போர்ட் (திருத்தப்பட்ட) விதிகள், 2026ன் கீழ் இந்த புதிய கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு, வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டில்தான் பாஸ்போர்ட் கட்டணங்கள் கடைசியாக மாற்றியமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 1 முதல் அமல்! பாஸ்போர்ட் எடுக்க இனி இவ்வளவு செலுத்த வேண்டுமா? மத்திய அரசு புதிய கட்டணப் பட்டியல் வெளியீடு
