கம்போடிய மக்கள் கட்சித் தலைவருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு

Estimated read time 0 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் ஜூன் 26ஆம் நாள் காலை, மக்கள் மாமண்டபத்தில் கம்போடிய மக்கள் கட்சித் தலைவரும், செனெட் அவைத் தலைவருமான ஹுன் செனைச் சந்தித்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது கம்போடிய மக்கள் கட்சி நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து தெரிவித்தார். மேலும் கம்போடியாவுடன் கட்சிகளிடையேயான தொடர்பை ஆழமாக்கி கட்சி மற்றும் ஆட்சி முறை அனுபவங்களின் பரிமாற்றத்தை வலுப்படுத்தி கட்சியின் ஆட்சித் திறனைக் கூட்டாக உயர்த்தச் சீனா விரும்புவதாகக் குறிப்பிட்ட ஷிச்சின்பிங், கம்போடியத் தரப்புடன் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி பிரதேசத்தில் அண்டை நாடுகளுடனான நட்புறவு என்ற அடிப்படையையும் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி பெறும் முக்கிய திசையையும் மேலும் நன்கு பேணிக்காக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

உலகின் கவனத்தை ஈர்க்கும் சாதனைகளைப் பெற்றுள்ள சீனா பல்வேறு நாடுகள் குறிப்பாக கம்போடியா உள்ளிட்ட தெற்குலக நாடுகளின் நிதானம் மற்றும் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது என்று ஹுன் சென் கூறினார்.

You May Also Like

More From Author