திருச்சி மாநகரின் முக்கியமான வரலாற்றுச் சின்னமாக இருந்த மத்திய பேருந்து நிலையம், 53 ஆண்டுகளுக்குப் பின்னர், வெளியூர் பேருந்து சேவையை இன்றுடன் (ஜூலை 16, 2025) நிறைவு செய்கிறது.
இப்போது முதல் இங்கிருந்து நகரப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1966ல் நகர்மன்றத் தலைவர் ஏ.எஸ்.ஜி. லூர்துசாமி பிள்ளையின் முயற்சியில், 1972ல் தமிழக முதல்வர் பகவத்சலம் அதிகாரப்பூர்வமாக திறந்துவைத்தார்.
அவரது நினைவாக பேருந்து நிலையம் ‘ஏ.எஸ்.ஜி. லூர்துசாமி பிள்ளை பேருந்து நிலையம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
சென்னை, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல நகரங்களுடன் இணைப்பான மையமாக இருந்த இந்த 4.5 ஏக்கரில் அமைந்த பேருந்து நிலையம், ISO தரச்சான்று பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம்- 53 ஆண்டுகள் சேவை இன்றுடன் நிறைவு
