மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நிலத்தடி நீரில் மனிதக் கழிவுகளால் உருவாகும் ஆபத்தான இ-கோலை (E. coli) பாக்டீரியா கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், குடிநீராகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீர் சுகாதாரமற்ற நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுகாதாரத் துறை விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
எஸ்கெரிச்சியா கோலை எனும் இ-கோலை என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலில் பொதுவாகக் காணப்படும் ஒரு வகை பாக்டீரியா ஆகும்.
இதில் பெரும்பாலானவை பாதிப்பில்லாதவை என்றாலும், சில குறிப்பிட்ட வகைகள் கடுமையான வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பாதை தொற்று மற்றும் சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும்.
போபால் நிலத்தடி நீரில் இ-கோலை பாக்டீரியா: அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டி
