சீராக வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரம்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு 24ஆம் நாள் கூட்டம் நடத்தி, தற்போதைய பொருளாதார நிலைமையை ஆராய்ந்து, இவ்வாண்டின் பிற்பாதி பணிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இக்கமிட்டியின் பொது செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
இவ்வாண்டில் ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட கட்சி மத்திய கமிட்டியின் தலைமையில், பல்வேறு பகுதிகளில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிலைமையின் ஒன்றிணைப்பு, முழு ஆண்டின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி இலக்கை அடைவதற்கு உறுதியான அடிப்படையை உருவாக்கியுள்ளது. தற்போது பொருளாதார வளர்ச்சியில் புதிய இன்னல்களும் சவால்களும் நிலவிய போதிலும், மாபெரும் உறுதி மற்றும் உள்ளார்ந்த ஆற்றல் கொண்ட சீன பொருளாதாரத்தின் நீண்டகால வளர்ச்சி போக்கு மாறவில்லை என்று இக்கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
நவீனமயமான தொழில் அமைப்பு முறையின் உருவாக்கத்தை முன்னேற்றி, புதிதாக வளர்ச்சி வாய்ப்பைக் கண்டுள்ள தொழில்களை வலிமைப்படுத்தி, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியைத் தொடர்ந்து ஆழமாக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.