கொலம்பியா அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங்கின் வாழ்த்துகள்

கொலம்பியா அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி லா எஸ்பிரியெல்லாவுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 29ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

இதில் ஷி ச்சின்பிங் கூறுகையில்,

சீனாவும் கொலம்பியாவும் நெடுநோக்கு கூட்டாளியாக திகழ்கின்றன. தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 46 ஆண்டுகாலத்தில், இரு நாடுகளும் அரசியல் நம்பிக்கை வலுப்படுத்தி, மக்களுக்கிடையிலான நட்புறவை ஆழமாக்கியுள்ளன. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவை கூட்டாக கட்டியமைப்பதில் புதிய முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. சீன-கொலம்பிய உறவு வளர்ச்சியில் நான் உயர்வாக கவனம் செலுத்தி வருகிறேன். எஸ்பிரியெல்லாவுடன் இணைந்து, இரு நாட்டு பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, சீன-கொலம்பியா நெடுநோக்கு கூட்டாளியுறவு வளர்ச்சிக்குத் தலைமை தாங்கி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்க விரும்புகிறேன் என்றார்.

You May Also Like

More From Author