சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 105ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மாநாடு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் 105ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மாநாடு ஜூலை முதல் நாள் பெய்ஜிங் மாநகரிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், “ஜூலை ஒன்று” பதக்கங்களை வழங்கி, முக்கிய உரை நிகழ்த்தினார்.

“ஜூலை ஒன்று” பதக்கமானது, கட்சியின் மிக உயர்நிலை கெளரவமாகும். கட்சி மற்றும் பொது மக்களுக்கு முக்கிய பங்காற்றிய 8 கட்சி உறுப்பினர்களுக்கு இம்மாநாட்டில் இக்கௌரவம் வழங்கப்பட்டது. மேலும், தேசிய நிலைத் தலைச்சிறந்த கட்சி உறுப்பினர்கள், கட்சி விவகாரத்துக்கான தலைச்சிறந்த பணியாளர்கள், முன்னேறிய அடிமட்ட நிலை கட்சிக் குழுக்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் பாராட்டப்பட்டுள்ளனர்.

தலைவர் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்துகையில்,

கடந்த 105 ஆண்டுகளில், மக்களின் இன்பங்களையும் சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியையும் நனவாக்கும் ஆரம்ப குறிக்கோள் மற்றும் கடமையை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் நினைவில் கொண்டுள்ளது. கட்சியின் தலைமையில், நாட்டின் பல்வேறு தேசிய இன மக்களுடன் ஒன்றுபட்டு, அயராத முயற்சிகளை மேற்கொண்டு, புதிய ஜனநாயக புரட்சி, சோஷலிச புரட்சி மற்றும் கட்டுமானம், சீர்திருத்தம் மற்றும் திறப்பு, சோஷலிச சமூகத்தின் நவீனமயமாக்கக் கட்டுமானம், புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச இலட்சியத்தின் சாதனை ஆகியவற்றை நனவாக்கியுள்ளனர் என்றார்.

பொது மக்களே, வரலாற்றின் படைப்பாளர்களாகவும், உண்மையான வீரர்களாகவும் திகழ்கின்றனர் என்று தெரிவித்த ஷி ச்சின்பிங், கட்சி மத்திய கமிட்டியின் சார்பில், அனைத்து சீன மக்களுக்கும், பல்வேறு துறையினர்களுக்கும் மரியாதை தெரிவித்தார். மேலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறந்த குண நலன்களையும் அவர் விவரித்தார்.

அவர் கூறுகையில்,

உண்மையை எப்போதும் நாடுவது, பொது மக்களுடன் சேர்ந்து எப்போதும் இருப்பது, வரலாற்றுக் கடமைகளைத் துணிவுடன் ஏற்பது, வளர்ச்சிப் போக்கிற்கு இணங்க செயல்படுவது, போராட்டத்தைத் துணிந்து எதிர்கொள்வது, கட்சியின் ஒழுங்குமுறையை சரிசெய்வதில் கவனம் செலுத்துவது ஆகியவை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறந்த குண நலன்களாகும் என்று தெரிவித்தார். இதனால் தான், எமது கட்சி சீராகச் செயல்பட்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கையை வலுப்படுத்தி, இடைவிடாமல் போராடி, யுகமும் மக்களும் கொடுக்கும் பொறுப்புகளை செவ்வனே மேற்கொண்டு புதிய சாதனைகளை தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

You May Also Like

More From Author