பாண்டாவுடன் சீனப் பயணம் என்ற சீனா-அமெரிக்கா இளைஞர்களின் பரிமாற்ற நடவடிக்கை

Estimated read time 1 min read

பண்டாக்களுடன் இணைந்து சீனாவில் பயணம் மேற்கொள்வது என்ற சீன-அமெரிக்க இளைஞர்களின் பரிமாற்ற நடவடிக்கையில் கலந்துகொண்ட அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அண்மையில் சீனாவின் சிச்சுவான் மாகாணத்துக்கு சென்று, சீனத் தேசியப் பொக்கிஷமான ராட்சதப் பாண்டாக்களை மிக அருகில் பார்வையிட்டு, உள்ளூர் பொருள்சாரா கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் நகர்ப்புற காட்சிகள் ஆகியவற்றை அனுபவித்தனர்.

சீன ஊடக குழுமமும் அமெரிக்க-சீன இளைஞர் மற்றும் மாணவர் பரிமாற்ற சங்கமும் கூட்டாக ஏற்பாடு செய்த இந்நடவடிக்கை, இருநாட்டு இளைஞர்களை ஒன்றிணைத்து, இருநாட்டு நட்புறவுக்கான ஒருமித்த கருத்தை உருவாக்கி, சீன-அமெரிக்க உறவின் சீரான வளர்ச்சியில் அன்பான மற்றும் நிலையான இளம் ஆற்றலைச் செலுத்தியுள்ளது.

You May Also Like

More From Author