தென்னாப்பிரிக்க துணை அரசுத் தலைவரின் சிறப்பு பேட்டி

Estimated read time 1 min read

4வது சீன சர்வதேச விநியோகச் சங்கிலி மேம்பாட்டு கண்காட்சியில் கலந்துகொண்ட தென்னாப்பிரிக்க துணை அரசுத் தலைவர் பால் மஷாடில்லே அண்மையில் சீன ஊடக குழுமத்துக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், சீனா தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருப்பதோடு, இக்கண்காட்சி தென்னாப்பிரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், தென்னாப்பிரிக்காவின் சிறப்பான பண்புகளையும் நன்மைகளையும் வெளிப்படுத்தும் அதே வேளையில், இக்கண்காட்சியில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை தேட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பலமுறை சீனப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், சீனாவின் விரைவான வளர்ச்சியைக் கண்டு வியப்பதாக தெரிவித்தார். மேலும், சீனா எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், சீனா எவ்வாறு திட்டங்களை உருவாக்கி அவற்றைச் செயல்படுத்துகிறது என்பதையும் தென்னாப்பிரிக்கா கற்றுக்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 53 ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா வரி விலக்கு கொள்கையை செயல்படுத்துவது குறித்து, இக்கொள்கை மிகச் சிறந்தது என பாராட்டையும், இக்கொள்கையை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்புகளைத் திரித்துப்புரட்டி இழிவுபடுத்தும் கூற்று குறித்து அவர் கூறுகையில், கூறப்பட்ட எதிர்மறையான விளைவுகளை இல்லாமல், நேர்மறையான சாதனைகளையே நாங்கள் காண்கிறோம் என்று வலியுறுத்தினார்.

You May Also Like

More From Author