அமெரிக்கா, சீன மாணவர்களின் விசாவை ரத்து செய்யத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ருபியோ 28ஆம் நாளன்று தெரிவித்தார். அமெரிக்காவின் இச்செயலை உறுதியாக எதிர்ப்பதோடு, சீன மாணவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை உறுதியாகப் பேணிக்காக்கவுள்ளதாக சீன அதிகார வட்டாரம் தெரிவித்துள்ளது.
தற்போது சீனாவுடனான நெடுநோக்கு போட்டியின் மீதான கடும் கவலையில் அமெரிக்க அரசு சிக்கியுள்ளது. தேசியப் பாதுகாப்புப் பிரச்சினையை ருபியோ போன்ற அமெரிக்க அரசியல்வாதிகள் அளவுக்கு மீறி விரிவாக்கி, தனிநபரின் அரசியல் ரீதியான நலன்களை நாடும் வகையில் சீனாவின் மீது புவியமைவு அரசியல் போட்டியை தொடுப்பதற்கு வசதியாக மாணவர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
வெளிநாட்டு மாணவர்களின் விசா பிரச்சினையில் கட்டுப்பாடுகளை விதிக்கும் அமெரிக்காவின் இச்செயல், உலகின் பல நாட்டு மாணவர்களிடையில் பரந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று பி.பி.சி. ஏ.எப்.பி. உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. பல நாடுகளின் மாணவர்கள் சமூக ஊடகப் பக்கத்தில், தங்களது சட்டப்பூர்வ உரிமையைப் பாதிக்கும் அமெரிக்க அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஹார்வேர்டு, எம்.ஐ.டி. உள்ளிட்ட அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தன. அரசின் விசாக் கொள்கை மிகவும் தவறானது. இக்கொள்கையால் எதிர் விளைவுகளைத்தான் பெற முடியும் என்பதோடு அமெரிக்காவே பாதிக்கப்படும் என்றும் விஸ்லி பல்கலைக்கழக வேந்தர் மைக்கில் லோஸ் வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கம் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் அமெரிக்கா தனது சுதந்திரமான கல்விச் சூழ்நிலையைப் போற்றி வருகின்றது. ஆனால், வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்யும் நடவடிக்கையால் அமெரிக்காவின் குமிழ் உடைபட்டு அம்பலப்பட்டுள்ளது.