மேட் இன் இந்தியா செமிகண்டக்டர் சிப்கள் மூலம் ஏஐ புரட்சி: ஜப்பானுக்கு முதல் ஏற்றுமதி தொடக்கம்  

இந்தியாவை உலகளாவிய தொழில்நுட்ப மையமாக மாற்றும் விக்சித் பாரத் இலக்கின் ஒரு முக்கிய பகுதியாக, குஜராத்தின் சானந்த் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிஜி செமி நிறுவனத்தின் புதிய செமிகண்டக்டர் சிப் பேக்கேஜிங் மற்றும் டெஸ்டிங் ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 4) திறந்து வைத்தார்.
இந்த ஆலையில் வணிகரீதியாகத் தயாரிக்கப்பட்ட முதலாவது மேட் இன் இந்தியா செமிகண்டக்டர் சிப்களின் தொகுப்பைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, அதனை ஜப்பான் நாட்டுக்கான ஏற்றுமதிக்குத் தொடங்கி வைத்தார்.
இது இந்தியத் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு மைல்கல் நிகழ்வாகும்.

You May Also Like

More From Author