மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் பொறுப்பை ஏற்று, “சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சிமுறையில் ஊன்றி நிற்பது தொடர்புடைய முக்கிய பிரச்சினைகள் பற்றிய தீர்மானம்” குறித்து, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 5ஆவது முழு அமர்வில் விளக்கம் அளித்தார்.
இதில் மூன்று அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முதலாவதாக, இம்முழு அமர்வின் கருப்பொருள் எப்படி நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவதாக, இத்தீர்மானம் எப்படி இயற்றப்பட்டது. மூன்றாவதாக, இத்தீர்மானத்தின் அடிப்படை கோட்பாடு மற்றும் முக்கிய அம்சங்கள்.
ஷிச்சின்பிங் கூறுகையில், கட்சி மத்திய கமிட்டி ஜனநாயகத்தைப் பின்பற்றி, புலனாய்வை ஆழமாக்கி, பரந்தளவில் கருத்துகளை கேட்டறிந்த பின், இந்த ஆவணத்தை இயற்றியது. இம்முழு அமர்வு, முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சிமுறையில் ஊன்றி நிற்பதை முக்கியமாக ஆராய்வது, எமது கட்சி சொந்த கட்டுமானத்தை வலுப்படுத்தும் உயர் விழிப்புணர்வையும் உறுதியான மனவுறுதியையும் முழுமையாக வெளிப்படுத்துகிறது என்று பல்வேறு தரப்புகள் ஒருமனதாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.
