மனித வாழ்வுக்குச் சோதனையாகியுள்ள தீவிர வானிலை

நடப்பு கோடைகாலத்தில் மேற்கு ஐரோப்பாவின் பல்வேறு இடங்களும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, தெற்காசிய பிரதேசத்திலும் தீவிர உயர் வெப்ப வானிலை நிலவுகிறது. இயல்பற்ற தீவிர வானிலையே, மனிதர்கள் கூட்டாக எதிர்கொள்ளும் சிக்கலாகி வரும் வாழ்வு பிரச்சினையாக மாறியுள்ளது. இது குறித்து சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் ஊடகம் உலகளாவிய இணைய பயனாளர்களிடையில் நடத்திய கருத்து கணிப்பின்படி, தீவிர வானிலை முழு மனிதகுலத்திற்கும் பொது சவாலாக மாற்றியுள்ள நிலையில் பல்வேறு நாடுகள் ஒத்துழைத்து பொறுப்பேற்பதே இதற்கு ஒரே சரியான தேர்வாகும் என்று 83.1 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த சில ஆண்டுகளில் தீவிர வானிலை ஏற்பட்ட முறைகளும் அதன் தாக்கமும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன என்று 83.3 விழுக்காட்டினர் கூறினர். தீவிர வானிலை குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் மட்டுமல்லாமல், அனைவரையும் பாதிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினையும் ஆகும் என்று 82.7 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர்.

உலகளாவிய காலநிலை நிர்வாகத்தில் யாரும் தன் நலன்களை மட்டும் கருத்தில் கொள்ள முடியாது. இது குறித்து, நிதி ஆதரவு தவிர, தொழில்நுட்ப பகிர்வு, பேரிடர் தடுப்பு அனுபவம், முன்னெச்சரிக்கைக்கான மூலவளங்கள் ஆகியவையும் காலநிலை ஒத்துழைப்புக்கு தேவை என்று 92.3 விழுக்காட்டினர் தெரிவித்தனர். மேலும், காலநிலை மாற்ற பிரச்சினையில் வளர்ந்த நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று 85.9 விழுக்காட்டினர் தெரிவித்தனர். இதனிடையே, வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு தொழில்நுட்ப ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் 88.7 விழுக்காட்டினர் சுட்டிக்காட்டினர்.

You May Also Like

More From Author