அண்மையில், குவாங்சி, ஹுபெய், கான்சு முதலிய இடங்களில் கடும் மழை மற்றும் பெரும் காற்று காலநிலையால், நீர் தேக்கம் அணை உடைப்பு, மலை நிலச்சரிவு முதலிய பேரிடர் நிலைமைகள் ஏற்பட்டன.
இக்காலநிலையால் பெரும் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் பொறுப்பாளருமான ஷிச்சின்பிங் வெள்ளத்தடுப்பு மற்றும் பேரிடர் நீக்கப் பணி பற்றி முக்கிய உத்தரவிட்டார்.
முழு மூச்சுடன் பேரிடர் நீக்கப் பணியை மேற்கொண்டு, காயமுற்றவர்களை குணப்படுத்தி, மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தி, கூடிய அளவில் உயிரிழப்பைக் குறைத்து, இரண்டாம் நிலை பேரழிவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
