பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார்.
இந்த பயணத்தின் போது அவருக்கு ஒரு தருமா பொம்மை பரிசாக வழங்ப்பட்டுள்ளது. இந்த பொம்மை ஜப்பானிய வரலாறு மற்றும் பாரம்பரியத்துடன் ஆழமாகப் பிணைந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லெண்ணத்தின் அடையாளமாக ஷோரின்சான்-தருமா-ஜி கோயிலின் தலைமை பூசாரியால் இது வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி, 15வது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
தருமா பொம்மை ஜப்பானின் மிகவும் நீடித்த கலாச்சார சின்னங்களில் ஒன்றாகும்.
வெற்று, வட்டமான மற்றும் பிரகாசமான வண்ணம் பூசப்பட்ட இது விடாமுயற்சி, மீள்தன்மை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை குறிக்கிறது.
ஜப்பானில் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட தரும பொம்மை; அதன் முக்கியத்துவம் என்ன?
