உலகளாவிய ஆட்சி முறையை மேம்படுத்தி மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தைக் கூட்டாகக் கட்டியெழுப்புவது என்ற லன்டிங் கருத்தரங்கு அக்டோபர் 27ம் நாள் சீன வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெறவுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ இக்கருத்தரங்கின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் 24ம் நாள் அறிவித்தார்.
சீன மற்றும் வெளிநாட்டு பல்வேறு துறைகளின் உயர்நிலை பிரதிநிதிகள், புகழ் பெற்ற நிபுணர்கள், அறிஞர்கள், சீனாவுக்கான வெளிநாட்டுத் தூதாண்மை அதிகாரிகள், சீனாவுக்கான சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் முதலியோர் அதில் பங்கெடுக்கவுள்ளனர். உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவின் செழுமையான உள்ளடக்கம் மற்றும் நடைமுறைகள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளனர்.
