செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன் ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்

Estimated read time 0 min read

ஆட்சிக் கவிழ்ப்பு சதி வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உள்ளது மெட்ராஸ் உயர் நீதிமன்றம்.

செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், த.வெ.க ஆட்சியை கவிழ்க்க முயற்சி என்பது எம்எல்ஏ இளையராஜாவின் கற்பனையாகும்.

அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டவர். செந்தில்பாலாஜி சபாநாயகருக்கு எதிராக ஏன் செயல்பட வேண்டும்? கரூரில் இடைத்தேர்தல் வரும் சமயத்தில் செந்தில்பாலாஜியை தேடுகிறது போலீஸ். குதிரை பேரம் நடைபெற்றதாக நிரூபிக்கும் உறுதியான ஆதாரம் எங்கே? தொலைபேசி உரையாடல் பதிவுகள் மட்டுமே ஆதாரமாக கருத முடியாது. ₹35 கோடி பேரம் என்ற குற்றச்சாட்டு வெறும் யூகத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மீது அரசியல் வட்டாரங்களிலும் சட்ட வல்லுநர்களிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திருநாவுக்கரசு, அசோக் குமார் ஒரே நாளில் ஈரோட்டில் இருந்தது ஒரு ஆதாரமா? 59 எம்எல்ஏக்களை கொண்ட திமுகவால் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும்? உண்மையில் இந்த வழக்கை போலீசார்தான் பெரிதாக்கி வருகின்றனர். விசாரணைக்கு ஒத்துழைக்க செந்தில் பாலாஜி தயாராக உள்ளார் என்றார்.

இதனையடுத்து திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author