ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், உள்ளூர் நேரப்படி ஏப்ரல் திங்கள் முதல் நாளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீயுடன் மாஸ்கோவில் சந்தித்துரையாடினார்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குக்கான வாழ்த்துகளை புதின் வாங்யீயிடம் தெரிவித்தார். இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள பல ஒத்த கருத்துகள் பயனுள்ளதாக செயல்படுத்தப்பட்டுள்ளதை புதின் பாராட்டினார்.
ரஷிய-சீன உறவு உயர் நிலை வளர்ச்சியில் உள்ளது. பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்புகள் தொடர்ந்து விரிவாகியுள்ளன. ரஷிய-சீன பண்பாட்டு ஆண்டு எனும் நடவடிக்கை தடையின்றி நடைபெற்று, வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு, நாசி ஜெர்மனிக்கு எதிரான சோவியட் போர் வெற்றி பெற்றுள்ள 80ஆவது நிறைவு ஆண்டாகும். ரஷியாவுக்கு வருகை புரிந்து தொடர்புடைய நடவடிக்கைகளில் கலந்துகொள்ள அவர் சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதை வாய்ப்பாக பயன்படுத்தி, ரஷிய-சீன பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை புதிய கட்டத்தில் காலடியெடுத்துவைக்க வேண்டும். ஐ.நா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் உள்ளிட்ட பல தரப்பு கட்டுக்கோப்புக்குள்ள ஒத்துழைப்புகளை இரு தரப்பும் வலுப்படுத்த ரஷியா விரும்புகிறது என்று புதின் தெரிவித்தார்.
புதினுக்கு ஷிச்சின்பிங்கின் வாழ்த்துகளை வாங்யீ தெரிவித்தார். இரு தரப்பும் அரசியல் நம்பிக்கையை தொடர்ந்து ஆழமாக்கி, பயனுள்ள ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இரு தரப்புறவு மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்று வாங்யீ தெரிவித்தார்.
இப்பயணத்தின் போது, ரஷிய வெளியுறவு அமைச்சருடன் வாங்யீ பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.