உலகின் தென் பகுதியின் மறுமலர்ச்சி மற்றும் இது உலகத்தில் ஏற்படுத்தும் செல்வாக்கு குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 31ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், உலகின் தென் பகுதியின் நாடுகள் கையோடு கைகோர்த்து முன்னேறி, பொருளாதாரத்தின் உலகமயமாக்க மாற்றத்துக்கு புதிய இயக்கு ஆற்றலை வழங்கி, உலகின் மேலாண்மையை மேம்படுத்துவதற்கு புதிய நிலைமையைக் கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் உண்மையான பலதரப்புவாதத்தை சீனா தொடர்ந்து செயல்படுத்தி, வளரும் நாடுகளின் கூட்டு நலனை உறுதியுடன் பேணிக்காத்து, உலகின் தென் பகுதியின் நாடுகள் ஒன்றுபட்டு சுயவலிமை அடையும் ஆற்றலைத் திரட்டி, மனித குலத்தின் முன்னேற்றத்தைத் தூண்டுவதற்கு பங்காற்றும் என்று தெரிவித்தார்.