2026ஆம் ஆண்டு சீனாவில் 15 ஆயிரம் கோடி கிலோகிராமைத் தாண்டிய கோடைக்கால தானிய விளைச்சல்

Estimated read time 0 min read

2026ஆம் ஆண்டு சீனாவின் கோடைக்கால தானியம் அமோக அறுவடையைப் பெற்றுள்ளது.

இக்காலத்தில் அறுவடை செய்யப்பட்ட மொத்த தானிய விளைச்சல் 15074.5 கோடி கிலோகிராம் ஆகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட இது 0.7 விழுக்காடு அதிகமாகும்.

முழு நாட்டின் 25 கோடைக்கால தானிய உற்பத்தி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தானியம் பயிரிடப்படும் நிலப்பரப்பு 2 கோடியே 65 இலட்சத்து 32 ஆயிரம் 400 ஹெக்டராகும்.

ஹெக்டருக்குத் தலா 5681.6 கிலோகிராம் விளைச்சல் கிடைக்கும். இது 2025ஆம் ஆண்டில் இருந்ததை விட 0.8 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author