2025ஆம் ஆண்டு எரியாற்றல் பணிக்கான வழிகாட்டு முன்மொழிவைச் சீனத் தேசிய எரியாற்றல் பணியகம் 27ஆம் நாள் வெளியிட்டது.
அதன்படி இவ்வாண்டில் சீன நாடளவில் மின்சார உற்பத்தி சாதனங்களின் மொத்த ஆற்றல் திறனை 360கோடி கிலோவாட்டுக்கு மேல் எட்டச் செய்ய வேண்டும். புதிதாக அதிகரிக்கும் புதிய எரியாற்றல் மூலமான மின்சார உற்பத்தி சாதனங்களின் மொத்த ஆற்றல் 20கோடி கிலோவாட்டுக்கு மேல் இருக்க வேண்டும் என்று இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொழில்துறை, போக்குவரத்து, கட்டமைப்பு, தரவு மையம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் சீனா புதுபிக்கப்பட்ட எரியாற்றல் மாற்ற நடவடிக்கையைப் பெரிதும் நடைமுறைப்படுத்தவுள்ளது.
கார்பன் இல்லா பூங்கா கட்டுமானம் மற்றும் ஒளிவோல்ட்டா மின்கல கட்டிடங்களின் ஒருங்கிணைப்புக்கும் ஆக்கப்பூர்வமாக ஆதரவளிக்கும் என்று இப்பணியகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.