சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஐ.நா.பொது பேரவையின் அமர்வில் கலந்து கொண்டபோது, போர்ச்சுக்கல், கிரேக்கம், சைப்ரஸ், ஸ்லோவேனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சாதாரண கடவுச் சீட்டை வைத்திருப்பவர்கள் சீனாவுக்கு விசா இல்லாமல் வர சீனா அனுமதித்துள்ளது என்று அறிவித்தார்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியான் 30ஆம் நாள் கூறுகையில், சீன மற்றும் வெளிநாட்டு மக்களுக்கிடையேயான தொடர்பை மேலும் ஊக்குவிக்கும் வகையில், விசா இல்லாமல் சீனாவுக்கு வரும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.