சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சமீபத்தில், சீன-டென்மார்க் வணிக சபை பொறுப்பாளர்களுக்குப் பதில் கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அதில், சீன-டென்மார்க் மற்றும் சீன-ஐரோப்பிய நட்புறவை வலுப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று நலம் தரும் ஒத்துழைப்புகளுக்கு, இச்சபையும் இச்சபை தொடர்புடைய உறுப்பு நிறுவனங்களும் புதிய பங்காற்ற வேண்டும் என்று ஷிச்சின்பிங் ஊக்குவித்தார்.
கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என எந்தக் காலமாக இருந்தாலும் சீனா வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொகுசான, பாதுகாப்பான, இலாபத்தைத் தரும் முதலீட்டு நாடாக விளங்குகிறது. இந்நிலையில் சீனா மீது கொண்டிருக்கும் நம்பிக்கையானது எதிர்காலத்திற்கான சிறந்த வாய்ப்பு என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இச்சபையின் பொறுப்பாளர் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கு கடிதம் அனுப்பிருந்தார். அதில், இரு தரப்பு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனாவுடன் ஒத்துழைக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.