ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்டில் இருந்து ஓய்வு?

Estimated read time 1 min read

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருபவர் விராட் கோலி. இவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார். இதேபோல் தனக்கென பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அந்த தொடருக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் அறிவித்தனர்.

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விராட் கோலி ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது ஓய்வு முடிவை விராட் கோலி ஏற்கனவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யிடம் தெரிவித்துவிட்டதாகவும், ஆனால் பிசிசிஐ அவரது முடிவை ஏற்காமல் மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடதக்கது.

You May Also Like

More From Author