2025ஆம் ஆண்டு மருத்துவக் காப்பீட்டுப் பணியின் வளர்ச்சி பற்றிய புள்ளியியல் அறிக்கையைச் சீனத் தேசியச் சுகாதார பாதுகாப்பு பணியகம் ஜூலை 16ஆம் நாள் வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டு இறுதி வரை, நாடு முழுவதும் அடிப்படை மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 133.1 கோடியை எட்டி, 95 விழுக்காடு எனும் விகிதத்தை அடைந்துள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டில் நாடளவில் அடிப்படை மருத்துவக் காப்பீட்டு நிதியத்தின் கையிருப்புத் தொகை 52 ஆயிரத்து 577.2 கோடி யுவானாகும். இந்த நிதியம் சீராக இயங்கி வருகிறது.
இதனிடையில், 14வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில், மருத்துவக் காப்பீட்டில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 88 லட்சம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
