சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2026 உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆட்சிமுறை பற்றிய உலகளாவிய உயர்நிலை கூட்டத்தில் பங்கேற்க சீனாவுக்கு வருகை புரிந்துள்ள கசகஸ்தான் அரசுத் தலைவர் டோகாயேவை 16ஆம் நாள் மாலை ஷாங்காய் மாநகரில் சந்தித்துரையாடினார்.
அப்போது ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், இவ்வுலகத்தின் நூற்று ஆண்டுகளில் கண்டிராத மாற்றங்களை எதிர்கொண்டு, சீனா மற்றும் கசகஸ்தானின் நிரந்தர பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு உயர் நிலை வளர்ச்சியை நிலைநிறுத்தி மாபெரும் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை காட்டியுள்ளன. இரு நாடுகளும் வளர்ச்சி நெடுநோக்கு மற்றும் கொள்கை ரீதியிலுள்ள தொடர்பை வலுப்படுத்த வேண்டும். பயனுள்ள ஒத்துழைப்பைத் தொடர்ந்து உயர்த்தி கூட்டு வளர்ச்சியை முன்னேற்றி இரு நாட்டு நெடுநோக்கு ஒத்துழைப்பில் புதிய சாதனைகளைப் பெறுவதை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
மேலும், சீன-கசகஸ்தான் பன்முக ஒத்துழைப்பை உறுதியாக முன்னேற்றுவது இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் அடிப்படை நலனுக்குப் பொருந்தியது என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். கசகஸ்தானுடன் இணைந்து 4 உலக முன்மொழிவுகளைக் கூட்டாக நடைமுறைப்படுத்தி பலதரப்புவாத அமைப்பு முறைகளில் இரு நாட்டு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி சர்வதேச நியாயத்தைக் கூட்டாகப் பேணிக்காக்கச் சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
