அண்மையில், நியூயார்க் டைம்ஸ் நாளேடு உள்ளிட்ட மேலை நாட்டு ஊடகங்கள் மற்றும் அமைப்புகள், ஷி ட்சாங் பற்றிய போலியான தகவல்களை வெளியிட்டன.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் கூறுகையில், தொடர்புடைய அரசியல்வாதிகள், ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் உண்மைகளைத் திரித்து வெளியிட்டு, வதந்திகளைப் பரவல் செய்வதற்கு சீனா உறுதியுடன் எதிர்ப்பு தெரிவித்தது. ஷி ட்சாங் விவகாரம், சீனாவின் உள் விவகாரமாகும். எந்த வெளிநாட்டுச் சக்திகள் இதில் தலையிடக்கூடாது.
நீண்டகாலமாக, ஷி ட்சாங் பொருளாதாரம் சீரான வளர்ச்சியடைந்து, சமூகம் நிதானமாக உள்ளது. அத்துடன், அங்குள்ள பண்பாடு மற்றும் பாரம்பரியம் செவ்வனே பாதுகாக்கப்பட்டு, மக்களின் வாழ்க்கை பெரிதும் உயர்த்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் கவனிப்பு மற்றும் முழு நாட்டு மக்களின் ஆதரவுடன், ஷி ட்சாங் பெரும் முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. மேலதிக வெளிநாட்டவர்கள் ஷி ட்சாங்கில் பயணம் மேற்கொண்டு, உண்மையான ஷி ட்சாங் பற்றி அறிந்து கொள்வதை வரவேற்கிறோம் என்றார்.