சீன ஊடகக் குழுமத்தின் சீனச் சிவப்பு எனும் 8 கே அல்ட்ரா எச்.டி. ஒளிபரப்பு வாகனம் பாரிஸில் இயங்கியது

சீன ஊடகக் குழுமத்தின் சீனச் சிவப்பு எனும் 8 கே அல்ட்ரா எச்.டி. ஒளிபரப்பு வாகனம் பாரிஸில் உள்ள டி பிரான்ஸ் விளையாட்டரங்கில் ஜூலை 25ஆம் நாள் உபகரணங்கள் அமைத்தல் மற்றும் ஒளிபரப்பு அமைப்பின் தொழில்நுட்பச் சோதனையை நிறைவு செய்துள்ளது.

அதையடுத்து இவ்வாகனம், நிகழ்ச்சி தயாரிப்பு குழுவும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இவ்வாகனம்,  டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பு செய்த பிறகு, வெளிநாடுகளில் உள்ள ஒலிம்பிக் ஒளிபரப்புச் சேவை நிறுவனத்திற்கு ஒளிபரப்பு தொழில்நுட்ப குழு ஆதரவை மீண்டும் வழங்கும் பொருட்டு முதன்முறையாக கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான 8 கே பொது சமிக்கை தயாரிப்பை மேற்கொள்கின்றது.

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி காலத்தில் உலகளாவிய பார்வையாளர்களுக்கு தடகளப் போட்டிகள் மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகளின் போது 8 கே சர்வதேச பொது சமிக்கையை இவ்வாகனம் விநியோகிக்கும்.

முன்னதாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹை சியோங் டி பிரான்ஸ் விளையாட்டரங்கில் “சீனச் சிவப்பு” 8 கே அல்ட்ரா-எச்.டி ஒளிபரப்பு வாகனத்தின் பல்வேறு பணிகளுக்கான ஆயத்த நிலைமையைச் சோதனை செய்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author